முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் இறந்த சிறுமி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!
advertise here on top
advertise here on top

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் இறந்த சிறுமி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி இஷாலினியிடம் வாக்குமூலம் பெற முயற்சிக்கபட்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ளது.அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்கும் அளவிற்கு ஹிஷாலினி, சுகாதார நிலைமையை கொண்டிருக்கவில்லை. ஹிஷாலினியிடம் வாக்குமூலம் பெற பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அது சத்தியப்படாமை தொடர்பில் தமது அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் அறிய கிடைத்த தருணம் முதல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், வாக்குமூலங்கள் மற்றும் மீள் வாக்குமூலங்கள் 35 வரை பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. எந்தவொரு நபரினதும் அழுத்தங்களுக்கு அடிபணியாது, பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தொடர்ச்சியாக விடயங்களை தெளிவூட்டி, அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவதாக பொலிஸ் தலைமையகம் உறுதியளித்துள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.