
இன்று நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்ற போதிலும், கொரோனா பரவுவதற்கான ஆபத்து நீங்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)