
சமூகத்தின் தனித்துவம் காக்க வந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக தனித்துவம் எவ்வாறானாலும், தத்தமது தனித்துவங்களை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத நிலைக்கு ஆலாகி விட்டனர். தொடர்ந்தும் இவர்களின் செயற்பாடு முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகத்திடம் தலைகுனிய வைக்கின்றது. இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில், கேவலமான அரசியல் வரலாற்றுப் பக்கங்களை எழுத ஆரம்பித்துளனர்.
20 வது திருத்தத்தில் கையை தூக்கிய மறுகனமே, இவர்கள் இல்லா விட்டாலும் நம் 20 வது திருத்தத்தில் வென்றிருப்போம் எனக் முக்கிய அமைச்சர் ஒருவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் அமைச்சுப் பதவிக்காகவே கை உயர்தியதாகவும் அவர்கள் தந்த வார்த்ததையை நிறைவேற்றுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும், அமைச்சுப் பதவிக்கான தமது ஏக்கத்தை வெளியிட்டிருந்தார்.
மேலும் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரனையில், அமைச்சர் கம்மம்பில அவர்கள், தாம் இவர்களிடம் ஆதரவு கேற்கவில்லை எனவும், இவர்களே வாக்களித்ததாகவும், இவர்கள் தமக்கு வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் எனவும், இவர்களின் தலைவர்களை தாம் எதிர்ப்பதாகவும், அவர்கள் ஆளும் கட்சிக்குள் வரக்கூடாது, இவர்கள் இலங்கை அரசியலில் மோசமானவர்கள் எனவும், இவர்கள் சம்பந்தமாக தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இது ஒரு சமூக மறியாதை அற்ற, சமூகத்தை தலைகுனிய வைத்த ஒரு செயற்பாடாகும். இவர்கள் எவ்வளவு தான் அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்தாலும். அங்கு இவர்களின் நிலை, கணக்கில் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
நிலமை இவ்வாறு கேவலமாக தொடருமானால், இலங்கையில் முஸ்லிம்களின் அரசியல் நிலை மட்டுமல்ல, ஏனைய விடயங்களிலும் கவலைக் கிடமாகவும், பெறுமதி அற்ற சமூகமாகவும், நம்பிக்கை அற்றவர்கள், துரோகிகள், சந்தர்ப்பவாதிகள் என்ற கேவலமான பட்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறான கேவலமான ஒரு அரசியல் நிலை ஒரு போதும் ஏற்பட்டதில்லை. நம் முன்னைய அரசியல் தலைவர்கள் தமது மானத்தையும் தம் சமூகத்தின் மானத்தையும் பாதுகாத்து அரசியல் செய்ததனால் தான் இந்நாட்டில் முஸ்லிம்களுக்ககு மதிப்பும் மறியாதையும் காணப்பட்டது.
எனவே தலைமைகளில் உள்ளவர்களின் செயற்பாடுகள் இந்நாட்டின் இருபது லட்சம் மக்களைக் கொண்ட முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் என்பதை இதன் பிறகாவது இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
-பேருவலை ஹில்மி