ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி உயிரிழப்பு!

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி உயிரிழப்பு!


முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களிற்குள்ளான வீட்டுப் பணிப் பெண்ணான சிறுமி நேற்று (15) காலை உயிரிழந்ததாக பொரளை காவல்துறை கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரியாவுக்கு தகவல் வழங்கியது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் விடுதி 73, தீவிர சிகிச்சை பிரிவு 02 இல் சிகிச்சை பெற்று இறந்த சிறுமியின் சடலத்தை நீதிவான் பார்வையிட்டார்.

பின்னர், கொழும்பு 07, பௌதாலோக மாவத்தை, எண் 410/16 இல் உள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்குச் சென்ற நீதிவான், அங்கு சிறுமி தீப்பற்றிய இடத்தில் ஆய்வு நடத்தினார்.

சிறுமியின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்துமாறு பொரளை காவல்துறை நீதிமன்றத்தை கோரியது. பிரேத பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

டயகம மேற்கு பகுதியைச் சேர்ந்த இஷாலினி ஜூட் குமார் என்ற 16 வயது சிறுமி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டு பணிப்பெண்ணான பணியாற்றிய நிலையில் கடந்த 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.