மாட்டு வண்டியில் பயணித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது!

மாட்டு வண்டியில் பயணித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது!

பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது காலியில் இன்று காலை மாட்டு வண்டியில் பயணித்த சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்வலர் கனிஷ்க லன்ரோல் என்பவரும் அடங்குவார்.

அதிகரித்து வரும் எரிபொருள் விலையை எதிர்த்தே மாட்டு வண்டியில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபர்கள் பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.