
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று நாட்டில் 2,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 207,943 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,670 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166,045 ஆக அதிகரித்துள்ளது.
