பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்!


பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை ரூ. 5 - 10 இனால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமக்கு ஏற்படும் உற்பத்திச் செலவை கருத்திற் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாண் தவிர்ந்த, பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலைகள் ரூ. 5 - 10 இனால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எரிபொருட்களின் விலை அதிகரிப்புச் சுமையும் தம் மீது திணிக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விற்பனை அதிகரிப்பையும் சுமக்க வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.