இந்தியாவைப் போன்று நாடு முடக்கப்படவுள்ளதா ? - இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவித்தல்!

இந்தியாவைப் போன்று நாடு முடக்கப்படவுள்ளதா ? - இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவித்தல்!

நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது,

"இந்தியாவில் 'டெல்டா' கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் கொடூர தாக்கங்களை நாள்தோறும் அறிகின்றோம். எனவே, மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

'டெல்டா' வைரஸ் கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை என்ற பிரதேசத்தில் ஒரு பகுதியில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நாம் எடுத்துள்ளோம்.

ஆனால், அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவினால் பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் இந்தப் பேரழிவைத் தடுக்கலாம். அதைவிடுத்து முழு நாட்டையும் தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது.

அன்றாடம் வேலை செய்யும் மக்களைப் பட்டினியால் சாகடிக்க முடியாது. நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொறுப்பின்றி நடந்தால் இந்தியாவின் நிலைமைதான் இங்கு ஏற்படும் என்றார்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.