பொலிஸாரால் பள்ளிவாசல் ஒன்று முற்றுகை! யாழில் சம்பவம்!

பொலிஸாரால் பள்ளிவாசல் ஒன்று முற்றுகை! யாழில் சம்பவம்!


யாழ். ஐந்து சந்திப்பகுதியில் பயணத் தடை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் குறித்த பகுதியின் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

தற்போது நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணத்தடையை மீறி யாழ். ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாயல் ஒன்றில் தொழுகையில்  ஈடுபட்டவர்கள் யாழ். பொலிசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகரின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டனர்.

இவர்களில் சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

-பிரதீபன்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.