ஊஞ்சலில் ஆடிய சிறுமிக்கு நேர்ந்த பரிதாப நிகழ்வு!

ஊஞ்சலில் ஆடிய சிறுமிக்கு நேர்ந்த பரிதாப நிகழ்வு!

கோப்புப் படம்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயது சிறுமி ஊஞ்சல் கயிறு இறுகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் மதியம் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கழுத்தில் கயிறு சிக்குண்டு மயக்கமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இடம் போதாமை காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் எனவும் இவரே மூத்த பிள்ளை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.