வெளிநாடுகளில் இருந்து இலங்கை பெற்ற கோடிக்கணக்கான கடன் மாயம்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை பெற்ற கோடிக்கணக்கான கடன் மாயம்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!


சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் குறித்து “Verité Research” என்ற நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணையின் மூலம் இலங்கை பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் பற்றிய தகவல் பதிவுகளில் குளறுபடி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாடு என்ற வகையில் அந்தந்த நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்கள், எந்த நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற தெளிவான தகவல்கள் இன்மை, அரச வெளிநாட்டுக் கடன் அளவு உண்மையான தொகையை விட குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளமை மற்றும் சில வெளிநாட்டுக் கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டபோது அவை காணாமல் போயுள்ளமை ஆகிய மூன்று பரபரப்பை ஏற்படுத்தும் காரணிகள் இந்த “Verité Research” நிறுவனத்தினால் நடத்தப்பட்டுள்ள விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட மூலங்களை குறிப்பிடுதலின் கீழ் அரச கூட்டுத்தாபனங்கள் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன்களில் சேர்க்காமை காரணமாக 2019ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு செலுத்த வேண்டிய முழு கடன் தொகையின் அளவானது உண்மையான அளவினைவிடவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இலங்கை அரசாங்கம் இந்த வருடத்தில் சீனாவுக்கு சுமார் 5,429 மில்லியன் அமெரி்கக டொலர்களை செலுத்த வேண்டும் என்ற போதிலும், 3387 டொலர்களாக அது அறிக்கைகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக திறைசேறியிடம் இருந்து 2007-2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் 2014ஆம் ஆண்டில் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கணக்கிற்கு மாற்றப்பட்டு, மீண்டும் 2017ஆம் ஆண்டில் திறைசேறியின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதுவும் விசாரணையில் புலப்பட்டுள்ளது. 

எனினும் இந்தக் கடன் அளவானது 2019ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய மிகுதிக் கடன் தொகையானது, திறைசேறியின் கணக்கிலோ அல்லது துறைமுக அதிகார சபையின் கணக்கிலோ குறிப்பிடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.


-true news

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.