எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக போட்டு உடைத்தார் கம்மன்பில!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக போட்டு உடைத்தார் கம்மன்பில!


எரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (13) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் பேசிய அவர்,

எரிபொருட்களுக்கான விலை உயர்வுக்கு நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலுக்குப் பிறகு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

“நிதியமைச்சராக பிரதமர் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக் குழுவால் விலையை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வாழ்க்கைச் செலவு தொடர்பிலான உப-குழு, கடந்த 9 ஆம் திகதியன்று கூடியது எனத் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜபக்ஷ ஆகிய மூன்று ராஜபக்ஷர்களும் இருந்தனர் என்றார்.

மேலும் இலங்கை பொதுஜன பெரமுண கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் கூறிய கூற்றுக்களை அமைச்சர் உதய கம்மன்பில நிராகரித்ததோடு இந்த கடிதம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே சவால் விடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.