கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்துசென்ற மருமகள்! குவியும் பாராட்டு!!

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்துசென்ற மருமகள்! குவியும் பாராட்டு!!


ஆஸ்பத்திரியில் சேர்க்க கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாஸ் (வயது 75). இவருடைய மகன் சூரஜ். திருமணமாகி மனைவி நிகாரிகாவை வீட்டில் விட்டு விட்டு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் மாமனாரை, நிகாரிகா கவனித்து வந்தார்.

இதற்கிடையே துலேஷ்வர் தாசுக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது என்று நிகாரிகா யோசித்தார்.

தாமதித்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அவர், சிறிதும் தாமதிக்காமல் கொரோனா பாதித்த தன் மாமனாரை முதுகில் சுமந்து கிடைத்த வாகனம் மூலம் அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில் மாமனாரை முதுகில் சுமந்து வந்ததால் நிகாரிகாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அவரை வீட்டு தனிமையில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட நிகாரிகாவுக்கு வலைத்தளத்தில் பாராட்டு குவிகிறது.

-Jaffna Muslim

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.