நாட்டுக்காக தியாகம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்கள் இன்றி அவதிப்படுகின்றார்கள் - வசந்த யாபா பண்டார கவலை!

நாட்டுக்காக தியாகம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்கள் இன்றி அவதிப்படுகின்றார்கள் - வசந்த யாபா பண்டார கவலை!

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்குவதற்கான அமைச்சரவை முன்மொழிவு பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் செய்யப்படவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட அமைச்சரவை அறிக்கை இதற்கு முந்தைய யோசனையின் அடிப்படையில் இருந்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், சில புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் இல்லை, அவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள் என்றும், அத்தகைய மக்கள் பிரதிநிதிகள் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, தற்போது அரசாங்கத்திற்கு சொந்தமான அல்லது புதிய வாகனங்களை வழங்க வேண்டும் என்உ தெரிவித்தார்.

இருப்பினும், நாட்டின் நெருக்கடி நிலைமை காரணமாக, சலுகைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, அரசியல்வாதிகள் மக்களை விட நாட்டிற்காக அதிக தியாகங்களை இக்கால கட்டத்தில் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.