மேலும் ஒரு மாதத்திற்கு முடக்கம்??? - விடுவிக்கப்பட்ட எச்சரிக்கை!

மேலும் ஒரு மாதத்திற்கு முடக்கம்??? - விடுவிக்கப்பட்ட எச்சரிக்கை!


தற்போது அமுலில் உள்ள பயணத்தடையின் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள குறைந்தது மேலும் ஒரு மாதமாவது அந்த கட்டுப்பாட்டை நீடிக்கவேண்டுமென இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மேலும் ஒரு மாதத்திற்கு பயணக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (08) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மே்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதிலும் பொதுமக்களின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சியாக இருக்க முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.சிலர் பொறுப்பற்ற முறையில் செயற்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், பயணக் கட்டுப்பாடுகளின் சரியான முடிவுகளைப் பெற மக்களின் ஆதரவு அவசியம் என்று குறிப்பிட்டார்.

தினமும் சுமார் 3,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், சமுகத்தில் 10,000 பேர் வரை அடையாளம் காணப்படாமல் உள்ளனர் என அவர் தெரிவித்தார். அதன்படி, எதிர்காலத்தில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும், மேலும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.