கணவன் மற்றும் 21 வயதுடைய மனைவி சடலமாக மீட்பு!

கணவன் மற்றும் 21 வயதுடைய மனைவி சடலமாக மீட்பு!

வெல்லவாய பகுதி வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இளம் தம்பதியினரின் சடலம் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

36 வயதுடைய கணவர் மற்றும் 21 வயதுடைய மனைவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் படுக்கை அறையில் இருந்து குறித்த நபர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணத்திற்கான காரணம் இது வரை தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.