நாம் ஏன் 10 நாட்களின் பரிசோதனையின்றி வெளியேற்றுகிறோம்? விளக்குகிறார் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

நாம் ஏன் 10 நாட்களின் பரிசோதனையின்றி வெளியேற்றுகிறோம்? விளக்குகிறார் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்!


கொரோனா நோயாளராக அடையாளம் காணப்பட்டு 5, 6 நாட்களின் பின்னர் நோய் அறிகுறிகள் இல்லாதிருக்கும் ஒருவரால் கொரோனா வைரஸை பரப்ப முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாகவே, கொரோனா தொற்றுறுதியாகி 10 நாட்களுக்குள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் பரிசோதனையின்றியே சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.


அதன்பின்னர் அவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.


அந்த 14 நாட்களுக்குள் அல்லது அதற்குப் பின்னர், பரிசீலனை மேற்கொள்ளப்படுமாக இருந்தால் கொரோனா வைரஸின் இறந்த கலங்கள் அவரின் உடலில் இருந்தால் அவர் நோயாளி என அடையாளம் காட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.


எனவே, இந்தக் காலப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை செய்வது அர்த்தமற்றதாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.