நாட்டில் 08 பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டில் 08 பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டின் எட்டு பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களு, களனி, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் கணிசமாக உயர்வடைந்த காரணத்தினால் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரன, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பிரதேசங்களில் உள்ளோர் மற்றும் மேற்கண்ட நதி நீர் பகுதிகளை அண்மித்து வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக் கூடும் என்றும் வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.