மது அருந்துபவர்களுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அடங்கிய சுகாதார வழிகாட்டல்!

மது அருந்துபவர்களுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அடங்கிய சுகாதார வழிகாட்டல்!


மதுபானசாலைகள், மது அருந்தும் இடங்கள் மற்றும் மது அருந்தும் அனுமதியுடனான உணவகங்களை நடத்திச் செல்வதற்கான சுகாதார வழிகாட்டியொன்றை மதுவரித் திணைக்களம் இன்று (06) வெளியிட்டுள்ளது.

1. மதுபான விற்பனை நிலையங்களை உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க முடியும்.

2. வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் கள்ளு அருந்தும் இடங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு.

3. நட்சத்திர ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகளுக்காக இரவு 10 மணி வரை மாத்திரம் திறக்க அனுமதி.

4. ஹோட்டல் மதுபான நிலையங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு.

5. திரையரங்கு மதுபானசாலை மறுஅறிவித்தல் வரை பூட்டு.

6. உணவகங்களுக்கான மதுபான நிலையம் மறுஅறிவித்தல் வரை பூட்டு.

7. வாடிவீடு மதுபானசாலை இரவு 10 மணி வரை திறக்க அனுமதி.

8. களியாட்ட விடுதிகளுக்கான மதுபான நிலையம் மறுஅறிவித்தல் வரை பூட்டு.

9. 22A அனுமதிப் பத்திரம் உள்ள இடங்கள் உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க அனுமதி.

10. 22B அனுமதிப் பத்திரம் உள்ள இடங்கள் மறுஅறிவித்தல் வரை பூட்டு.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.