கொரோனா தொற்றுக்கு மேலுமொரு கர்ப்பிணிப் பெண் மரணம்!

கொரோனா தொற்றுக்கு மேலுமொரு கர்ப்பிணிப் பெண் மரணம்!


காலி - கராபிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித் தாயொருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.


கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் இரண்டாவது கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் பதிவாகியுள்ளது.


கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் முல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, காலி கராபிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.


44 வயதான பெண், சில நாட்களுக்கு முன்பு மயக்க நிலையில் இருந்தபோது குழந்தையை பெற்றெடுத்தார்.


அந்தப் பெண் சுமார் 11 நாட்கள் எக்கோ இயந்திரத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று உயிரிழந்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.