எம்மோடு சேர்ந்து இப்தார் செய்திடுவார் என்றிருந்த எமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது!

எம்மோடு சேர்ந்து இப்தார் செய்திடுவார் என்றிருந்த எமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது!


என்னுடைய  உடன்பிறந்த மூத்த சகோதரர் அஹ்நாப் ஜஸீம் கடந்த ஒரு வருட காலமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

(முன்னைய பதிவை இங்கே வாசிக்கலாம்: https://www.yazhnews.com/2021/05/blog-post_19.html)

கடந்த வியாழக்கிழமை (06) வரைக்கும் நேற்றைய முன்தினம் (07) உயர் நீதிமன்றத்திற்கு என் சகோதரனுடைய வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற ஒரு ஒரே நிபந்தனையில் இருந்தது. ஆனால் இந்த கொரோனா நிலைமை கருதி 14ஆம் திகதி வரைக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது. 

ஆனால் இவர்களினால் உண்மையிலேயே எந்த ஒரு முன்னறிவிப்பும் செய்டயப்படவில்லை. இன்றோடு ஒரு வருடம் கடந்து ஒரு நாளாகும் ஆகிறது. (எம்மோடு இணைந்து இன்றைய நாளில் இப்தாரை செய்திடுவார் என்று எண்ணியிருந்த எமக்கெல்லாம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது). ஆனால் இவ்வாறான ஒரு பிற்படுத்தலையும் இழுபறி நிலைமையையும் இதுவரைக்கும் செய்து வருகின்றார்கள். 

அவரை சென்று பார்வையிடுவதற்கு கடந்த ஒரு ஆறு தொடக்கம் ஏழு மாதங்களாக அனுமதி மறுக்கப்படுகின்றது.  அதுமட்டுமல்லாது அவருக்கான உணவு மற்றும் உடை இதர பொருட்கள் என்பவற்றை மன்னாரிலிருந்து கொழும்பு சென்று கொடுக்க மட்டுமே முடிகின்றது.  

ஆனால் அவரை அப்போது பார்ப்பதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. 

மன்னாரில் இருந்து கொழும்பு சென்று உணவுகளையோ அல்லது உடையையோ கையளிப்பதற்கு இந்த கொரோனா காலத்தில் எங்களுக்கு கஷ்டமான தருணங்களில் நாங்கள் எங்களுடைய சொந்தமோ அல்லது தெரிந்தவர்கள் அந்த பொருட்களை கொண்டு போய்க் கொடுக்கும் பட்சத்தில் அங்கு இருக்கக்கூடிய அவர்கள் நீங்கள் அவருக்கு என்ன முறை என்று வினவுகின்றார்கள்.

தகப்பனார் அல்லது சொந்த உடன் பிறந்தவர்களாக ஒரே குடும்பத்தின் உடையவர்களாக இருக்க வேண்டும் இல்லையெனில், உங்களையும் நாங்கள் கைது செய்து இவ்வாறு பிடித்து வைத்து விடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள். 

இவ்வாறு பயமுறுத்துகிற சந்தர்ப்பங்களில் நான் எனது சகோதரன் என்ற அடிப்படையில் செல்வேன். எனது தகப்பனார் தன்னுடைய மகன் என்ற அடிப்படையில் செல்வார். ஆனால் இன்னொருவர் உண்மையிலேயே பயந்து செல்வார். உதவிக்கரம் நீட்டுகின்ற உறவுகளையும் தடுக்கின்ற ஒரு செயற்பாடாகவே உள்ளது. 

இவ்வாறான கடினமான தருணங்களையும் தாண்டி கொடுக்கப்படுகின்ற உணவுகள் முழுமையாக சென்றடைவதில்லை  அதிலும் அவர்கள் சிறிதளவு அல்லது அரைவாசி அளவு எடுத்து விட்டுத்தான் கொடுக்கிறார்கள். 

இப்படியான மிகவும் கடினமான இருக்கமான சதி செய்யக்கூடிய இந்த சதி வலையில் இருந்தும் கைதிலிருந்தும் விடுதலை ஆகுவதற்கு உடன்பிறவா சகோதர சகோதரிகளாகிய நீங்கள் இந்த ரமழான் மாதத்தில் இறைவனைப் பிரார்த்தித்து கேட்குமாறும், மற்றும் இன்னும் உங்களுக்குத் தகுமானளவு முடியமான ஆதரவையும் மற்றும் என்னுடைய சகோதர மொழி, சகோதர இன நண்பர்கள் அனைவரும் உங்களுடைய முழுமையான ஆதரவையும் உங்களுக்கு இயலுமான வகையிலான அனைத்து விடயங்களையும் இந்த சந்தர்ப்பத்திலும் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து கட்டாயமாக செய்து எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் உளம் நெகிழ  உதவிடுமாறு நான் மட்டுமல்ல எனது குடும்பம் சார்பாக முழுமையாகவும்   தாழ்மையாகவும் இந்த பதிவின் மூலமாக நான் மீண்டும் மீண்டும் வினயமாக கேட்டுக்கொள்கிறேன். 

இந்த பதிவினை உங்களுடைய சொந்த பந்தங்கள் உங்களுடைய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு பகிர்ந்து ஆதரவுகளை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எல்லா புகழும் இறைவனுக்கே..

-அப்ஹம் ஜஸீம்

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.