இந்திந்த பகுதிகளை உடனடியாக முடக்குவோம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இந்திந்த பகுதிகளை உடனடியாக முடக்குவோம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!


இலங்கையில் கொரோனா தொற்றால் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத ஆபத்தான பகுதிகளை உடனடியாக முடக்குமாறு கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.


தேவையான அனுமதி கிடைத்தவுடன் குறிப்பிட்ட பகுதிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


தற்போது நாடு முழுவதும் முடக்கவில்லை என்றாலும், அதிக ஆபத்தான பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என உபுல் ரோஹனா தெரிவித்துள்ளார்.


குறித்த பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.


எனவே குறித்த பகுதியில் வசிப்போர்கள் ஏனைய பகுதிக்கு சென்றால் வைரஸ் பரவ அதிக வாய்புள்ளமையை புரிந்துகொண்டு  பொதுமக்கள் செயற்பட வேண்டும் . எனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை விட் டுச் செல்ல வேண்டாம் என அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post