டிக்டொக்கும் வாலிபர்களின் கால வரையறையும்!

டிக்டொக்கும் வாலிபர்களின் கால வரையறையும்!


இக்காலத்தில் நவீனம் என்பது, பெரும் நாகரீகமாகவே மாறி விட்டது நாகரீகம் என்ற பெயருக்கும் இவர்கள் கொடுக்கும்  ஒற்றை விளக்கம் 'Fashion'  என்றும் 'Getthu' என்றும் 'Trend' என்றுமாகும்.


அதாவது, சமகாலத்தில் எவையெல்லாம் Trending ஆக உட்புகுத்தப்படுகின்றதோ, அவற்றை மேற்கொண்டால், இவர் 'Fashion Man / Genuine Man/Hero' என்றெல்லாம் புகழப்படுகின்றனர்.

உண்மை யாதெனில், இவ்வாறு சொல்வதால் அந்தப் பெயருக்குரிய மதிப்பு தான் இல்லாமல் போய் விடுகின்றது.


இங்கு விரிவாக பேசப்பட வேண்டியதொன்றை சுருக்கமாகப் பேச இருக்கிறேன். அது தான், ஒரு முக்கியமான செயலியாக செயற்படுத்தப்பட்டு கொண்டிக்கும் 'TikTok'ஐப் பற்றியே ஆகும்.


சிலர் இதனைக் கொண்டு சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற போதிலும், பலர் சாரை சாரையாக இதனுள் சென்று தன் மீது தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கின்றனர். 'இவன் ஆணாக இருக்கும் பெண்' என்ற ஓர் வார்த்தை பேச்சு வழக்கில் மிகக் கேவலமாக வர்ணித்து கூறப்படுகின்றது.


ஒன்று:

அவர்களிடம் ஏன் இப்படி ஒரு பெண்ணைப் போல் நடிக்கிறீர்கள்? என்ற வினாவை தொடுத்த போது அவர்களின் பதிலானது சற்று அபூர்வமானதாகவே இருந்தது. "எனக்கு Followers ஐக் கூட்ட வேண்டும்" என்ற நோக்கத்தைத் தவிர வேறு எதுவுமில்லை என்று கூறினர். நல்லதைப் பதிவிட்டு எதிர்பார்த்தால், கொஞ்சமாவது சிந்திக்கலாம். இது மட்டும் காரணமாக இருக்காது என்றெண்ணி, விடாமல் வேறு காரணமும் இருக்கிறதா? என்று கேட்க 'பெண்ணைத் தேடுவதும் ஒரு நோக்கம்' எனத் தயக்கத்துடன் பதில் பெறப்பட்டது.


ஆண்களுக்கு கூறும் விடயம் என்னவென்றால், "நாம் பெண்ணைத் தேட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எம்மை தேடி வருமளவுக்கு நாம் வளர வேண்டும். 'வரதட்சணை' எனும் கொடிய நோயை ஏற்காமல், அப் பெண்ணை வரவேற்க வேண்டும். 


இது எவ்வளவு புனிதமான ஒன்று!!!


இதை மனதில் எண்ணி வாழ்ந்தால், இந்த இகழக்கூடிய செயற்பாடுகளை விட்டொழிக்க முடியுமென்று, எம் நாளை தலைமையான தலைவர்களுக்கு அறிவிக்கிறேன்.


இரண்டு:

ஆண்கள் மட்டும் தானா! என்று பார்த்தால், அங்கு "இல்லை" என்ற பதிலுடன், பெண்களும் தான், முஸ்லிம் பெண்களும் கூட என்ற கசப்பான உண்மையா காதினால் கேட்க வேண்டியே உள்ளது.


இவர்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. சமகாலத்தில் நடக்கும் சண்டைகள் மற்றும் சச்சரவுகளுக்குக் காரணம் எதுவென்பதைப் புரிந்து உணர்வுடன் இவர்கள் செயற்பட வேண்டும்.


"உண்மையான மாற்றத்தை நோக்கிய எண்ணத்துடன், பாத்திமா நாயகியின் வரலாற்றை எடுத்து படிப்பதை கொண்டு பத்தினித்தமடைவீர்" என்ற உண்மைத்தன்மையையும் எங்கள் அரசிகளுக்கு அறிவிக்கிறேன்.


சுருக்கமாகக் கூறினால் "இது எமக்கென்று இறைவனால் தரப்பட்ட காலம் ஆகும். இதனை நாம் முடிந்தளவு இறைவனுக்குப் பொருத்தமான முறையில் வாழ வேண்டும். 


அதிகமான புத்தகங்களை வாசித்து புத்துணர்ச்சி பெற வேண்டும். நல்ல நண்பர்களுடன் நட்புறவாடி, நல்லதோர் இடத்தை அடைய வேண்டும். சிரிப்புக்கும் சந்தோஷத்திற்கும் சகபாடிகளுடனும் சமத்துவத்தைக் கையாள வேண்டும்" என்று சுருங்கக்கூறி முடித்து கொள்கிறேன்.


இறை நாட்டத்துடன், அடுத்த கட்டுரையுடன் உங்களனைவரையும் சந்திக்கும் வரை நான் உங்கள் அன்பு மாணவன்,


றஜா முஹம்மத் அப்துல் றஸாக்

(Little Writer, Founder and Community Lecture of Pena Thulihal, Community Member of Ezuththal Inaivoam)


Article Reviewed By:

Zahra Haani

(Writer, Poet)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.