நாட்டில் தினமும் ஐந்து மணித்தியாலம் அமுலாகவிருக்கும் ஊரடங்கு!

நாட்டில் தினமும் ஐந்து மணித்தியாலம் அமுலாகவிருக்கும் ஊரடங்கு!


இலங்கையில் தினசரி ஐந்து மணித்தியால தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.


தினசரி இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.


மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமுலாகும் தினத்தை அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ளது.


எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கு உத்தரவு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவுக்காக வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் சென்று வர அனுமதி வழங்குவதும், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நாட்களை ஒதுக்கிக்கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அதேநேரம், சமூக வலைத்தளங்களில் இன்று (11) இரவு 11.00 மணி முதல் நாளை 4.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றது. அத் தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.