கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கான அறிவித்தல்!

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கான அறிவித்தல்!


கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கு தேயைான எஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொகையை விரையில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.


இது தொடர்பாக சில நாடுகளுடன் தற்போதைய நிலையில் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இலங்கையில் சுமார் 6 இலட்சம் எஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவைப்படுகிறது.


குறித்த தடுப்பூசி தொகையை விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர், தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னர் வைரஸுக்கு எதிராக போராடும் திறன் உடலில் ஏற்பட சில காலம் தேவைப்படுவதால் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களை அவ்வாறே கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.


கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட போதும் அதனூடாக முழுவதுமாக வைரஸிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்காது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


-தெரண


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.