அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் ரத்து!

அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் ரத்து!

நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்சாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதேவேளைமீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலாகும் பயணத் தடை 28ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே புகையிரத திணைக்களமும் புகையிரத சேவையை இடைநிறுத்தும் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.