சகல மாவட்டங்களிலும் கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை!

சகல மாவட்டங்களிலும் கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை!


நாங்கள் தியாகிகளாக ஆகித்தான் எமது சந்ததியிற்கான 243 சதூர கிலோமீட்டர் நிலப்பரப்பை இழந்து குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்து சுற்றுப்புற சூழல் மாசடைவால் புற்று நோயாளர்களாகவும் சிறுநீரக நோயாளர்களாகவும் எமது பிரதேசத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


அதன் தொடரில் கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கு எமது பிரதேசத்தில் 3 ஏக்கர் நிலத்தை கொடுத்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருந்தோம். 


இரனைமடுவில் முஸ்லீம் உடல்களை அடக்க ஆர்ப்பாட்டம் செய்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் வெளிநாட்டவர்களின்  உடல்களும் மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இது எமது பெருந்தன்மை ஆனால் இப்பொழுது இருக்கும் கொரோனா இறப்பு விகிதத்தை பார்க்கும் போது இன்னும் பல ஏக்கர் நிலப்பரப்புக்கள் தேவைப்படும் போல் உள்ளது.


ஏற்கனவே எமது பிரதேசத்தில் இருக்கும் ஓட்டமாவடி, வாழைச்சேனை மீராவோடை மையவாடிகள் மக்கள் பரம்பலால் கூடிய பகுதிகளில் இருப்பதனால் சுற்றுப்புற சூழல் மாசடைவுகளினால் பல நோய்கள் ஏற்படுகின்றது என்பதால் தான் மஜ்மா நகரில் கல்குடா முஸ்லிம்களுக்கான மையவாடிக்கு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தற்பொழுது கொரோனா மையவாடிக்கு 3 ஏக்கரும் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இலங்கையில் கொரோனாவால் மரணிக்கும் அனைவரும் இங்கு அடக்கப்படுவார்களாக இருந்தால் இந்த 10 ஏக்கர் பொது மையவாடியும் எமக்கு இல்லாமல் போவதுடன் அங்கு இருக்கும் வயல் மற்றும் குடியிருப்பு நிலங்களும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் ஏற்கனவே எடுக்கப்பட்டது எதுவும் மாற்றீடாக இல்லை. 


இதற்கு மாற்று வாழியாக மாவட்ட ரீதியாக இடங்கள் அடையாளம் காணப்பட்டு அந்ததந்த மாவட்டங்களில் அடக்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மெற்கொள்ள வேண்டும், மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா உடல்களால் எந்த தொற்றும் பரவியதாக இதுவரை அறியப்படவில்லையெனில் ஏனைய பிரதேசங்களிலும் அடக்க செய்வதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்க அரசுடன் தொடர்பிலிருக்கும் Mp மார்கள் கவனம் செலுத்த வேண்டும் இது தொடர்பாக பிரதேச செயலகமும் பிரதேச சபையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


ஏ.எல்.சமீம்,

தலைவர்,

அல் மஜ்மா கிராம அபிவிருத்தி சங்கம்


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.