கொரோனாவும் இப்னு ஸீனாவும்!

கொரோனாவும் இப்னு ஸீனாவும்!


அல் பிரூனியும், இப்னு ஸீனாவும் சமகாலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகள். மருத்துவம் வானியல் தொற்றுநோய் தொடர்பில் நிபுணத்துவ அறிவு இவர்கள் இருவருக்கும் இருந்தது. 

அல்பிரூனி மூத்தவர். இப்னு ஸீனா இளையவர். வானியலிலும் புவியலிலும் அல்பிரூனி கொடிகட்டிப்பறந்த காலம் அது. இவருவம் இன்றை உஸ்பெகிஸ்தானைப் பிறப்படமாகக் கொண்டவர்கள். 


ஆனால் இப்னு ஸீனா மருத்துவத்துறையின் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருந்தார். அவரது "கானுன் அல் திப்" என்ற நூல் மருத்துவ விஞ்ஞானத்தின் பாடநூலாக அன்று கருதப்பட்டது.

இப்னு ஸீனா அல் பிரூனியைக் காணச் சென்றார். தொற்றுநோய் பரவல் பற்றி தனது ஆய்வை பகிரந்துகொள்வது அவரது நோக்கமாக இருந்தது.


அல்பிரூனியும் இப்னு ஸீனாவும் அன்றைய பரந்த பாரசீகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக இருந்தார்கள்.


பரந்த பாரசீகத்தில் நிலவிய தொற்று நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றி விளக்கமளிப்பதற்காக வந்திருந்த இப்னு ஸீனாவை கட்டிதழுவி வரவேற்கத்தயாரானார் அல்பிருனி. வேண்டாம் இது தொற்று நோய் பரவும் காலம் உடனடியாக நாம் கைகளைக் கழுவிக்கொள்வோம் என்றார் இப்னு ஸீனா.


இப்னு ஸீனா தொற்று நோயைக் கட்டுப்படுததுவதற்கான யோசனைகளை முன்வைத்தார். அல் பிரூனி Academy யில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தொற்றுநோயை பரவலைத் தடுப்பதற்கான யோசனைகளை இவ்வாறு முன்மொழிந்தார்.


1. மக்களை அச்சமடையச் செய்ய வேண்டாம். அது நிலையை மேலும் மோசமாக்கும்.

2. மக்களை வீடுகளில் இருந்துகொள்ளுமாறு அறிவிக்கவும்.


3. அதிகளவிலான மக்கள் இரே இடத்தில் ஒன்று கூடுவதைத் தடை செய்யவும்.


4. வெளி இடங்களுக் சென்றுவந்தால் உடனடியாக ஆடைகளை மாற்றிக்கொள்ளவும், கைகளைக் கழுவிக் கொள்ளவும்.


5. நாணயங்களை அடிக்கடி வினாக்கிரியில் கழுவிக்கொள்ளவும். கைகளையும் அதனால் கழுவுதல்.


6. சில வேளை சந்தைகளையும், பள்ளிவாசல்களையும் மூடவேண்டிய நிலை ஏற்படலாம். பள்ளிவாசலுக்கு பதிலாக வீடுகளில் மக்களைத் தொழுது கொள்ளுமாறு அறிவிக்கவும். இதைக் கேட்ட அல்பிரூனி அவர்கள் இடையில் குறுக்கிட்டு "சிலர் பள்ளிவாசல்களை மூடிவதை விரும்பமாட்டார்களே"  என்றார்.


இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றினால் மாத்திரமே எமக்கு இந்த தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றார் அலி இப்னு ஸீனா அவர்கள்.


சானிடைஸருக்கு பதிலாக அவர்கள் அன்று வினாகிரியை பயன்படுத்தியுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.


இது பற்றிய மேலதிக தகவல்களை கீழுள்ள இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம். 


https://youtu.be/SvkzsMIyB9wஆக்கம்.

பஸ்ஹான் நவாஸ்


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.