இலங்கையில் போலி தடுப்பூசி! பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டாம்!!

இலங்கையில் போலி தடுப்பூசி! பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டாம்!!


பொதுமக்கள் பணம் செலுத்தி போலியான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அரச ஔடத கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

இதுவரை பணம் செலுத்தி தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் முறை நடைமுறையில் இல்லை. எனவே போலியான மருந்துகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கத்தால் கொரோனா தடுப்பூசிகள் முற்றிலும் இலவசமாகவே ஏற்றப்படுவதுடன், எந்தவித கட்டணமும் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.

 

நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ள பகுதிகளை இனங்கண்டு மாவட்ட ரீதியாக தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

 

எனவே தடுப்பூசி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.