சீனாவின் ஹுவாவி நிறுவனத்தால் பாதுகாப்பு நித்தியத்திற்கு 2 மில்லியன் வழங்கி வைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீனாவின் ஹுவாவி நிறுவனத்தால் பாதுகாப்பு நித்தியத்திற்கு 2 மில்லியன் வழங்கி வைப்பு!


சீனாவின் முன்னணி ஸ்மார்ட் தொலைபேசி வடிவமைப்பு நிறுவனமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (31) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து 'இடுகம' சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.


தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஹுவாவி நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு இதன்போது பாராட்டினார்.


ஹுவாவி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் உப தலைவர் சென் மன்ஜி இதன்போது ஹுவாவி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக இலங்கையில் செயற்படுத்தப்படும் ஐந்தாண்டு சமூக பாதுகாப்பு திட்டத்தை கௌரவ பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார்.


சுமார் 10,000 மாணவர்களை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் திறமையானவர்களாக மாற்றுவதே இந்த சமூக பொறுப்பணர்வு திட்டத்தின் நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.