நாட்டில் நேற்றைய தினம் 2289 தொற்றாளர்கள் - மாவட்ட ரீதியில் வெளியான அறிக்கை!

நாட்டில் நேற்றைய தினம் 2289 தொற்றாளர்கள் - மாவட்ட ரீதியில் வெளியான அறிக்கை!

நாட்டில் நேற்று (14) மாத்திரம் 2,289 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி கொழும்பில் 555 பேரும் காலியில் 281 பேரும் கம்பஹாவில் 236 குருநாகலில் 218 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை களுத்துறையில் 211 பேருக்கும் புத்தளத்தில் 99 பேருக்கும் மாத்தளை மற்றும் மாத்தறையில் தலா 79 பேருக்கும் கேகாலையில் 73 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் நுவரெலியாவில் 71 பேருக்கும் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறையில் தலா 45 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் 40 பேருக்கும் கண்டியில் 38 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரியில் தலா 35 பேருக்கும் பொலன்னறுவையில் 29 பேருக்கும் திருகோணமலையில் 24 பேருக்கும் மொனராகலையில் 22 பேருக்கும் பதுளையில் 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 12 பேர் கிளிநொச்சியிலும் 11 பேர் மட்டக்களப்பிலும் 10 பேர் வவுனியாவில் ஒருவர் முல்லைத்தீவில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களும் அடங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.