2021 தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு Inspiring Youths அமைப்பினால் மரநடுகை நிகழ்வு!

2021 தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு Inspiring Youths அமைப்பினால் மரநடுகை நிகழ்வு!


தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு  2021 மே 23 திகதி ஞாயிறு காலை 9:00 மணிக்கு Akkaraipattu Inspiring youths அமைப்பின் அங்கத்தவரால் மர நடுகை நிகழ்வு ஒன்று சுகாதார விதிமுறையை கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனியாக பொது இடங்களில் ஒன்று கூடாமல்  தங்களுடைய வீடுகளிலும் வீடு சார்ந்த பகுதிகளிலும் மர நடுகை செய்து வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கப்பட்டது


மேலும் இத்திட்டத்திற்கு ஆதரவாக inspiring youths அமைப்பின் தலைவர் M.A.றுஷைத் அலி, செயலாளர் J.M சாஜித், உப தலைவர் S.A.அஸ்பக், ஆலோசகர் மற்றும் கிராம உத்தியோகத்தருமான ரிஜான், வெளிக்கல செயற்பாடு A.C.M. றிப்னாஸ், ஆகியோர் தங்களுடைய பங்களிப்பை அவர்களுடைய வீடுகளில் இருந்த வண்ணம் வழங்கி இருந்தார்கள், 


மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மரம் நடுவதை ஊக்குவிக்கும் முகமாக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


மேலும் இந்த செயற்திட்டத்திற்காக ஆதரவுகளை வழங்கிய அனைவருக்கும் inspiring  Youths அமைப்பின் சார்பான நன்றிகளை தெரிவிக்கின்றோம். 

ஆரோக்கியமான இளைஞர்களையும் பசுமையான சூழலையும் உருவாக்குவோம்.


மண்ணையும் கல்லையும் தாண்டியே மண்னை முத்தமிட்டு வரும் செடியின் வளர்ச்சி

மனித மிருகங்களின் சூழ்ச்சியை தாண்டியே சில மனிதர்களின் வளர்ச்சி!

மதிக்காவிட்டாலும் மிதிக்காதீர்கள்.Inspiring youths 

Akkaraipattu

அக்கரைப்பற்று இளைஞர் கழக  சம்மேளன சூழல் பாதுகாப்பு செயலாளர்


-M.A றுஷைத் அலிகருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.