
1. தவறு: கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
சரியானது: கழு தைக்கு தெரியுமாம் கற்பூர வாசனை.
இது பரவலாக அனைவராலும் பயன்படுத்த படும் கூற்று. ஒரு பொருளின், நபரின் அல்லது செயலின் அருமை பெருமை தெரியாதவரை திட்டுவதற்காக கூறுவார்கள். ஆனால் இந்தப் பழமிழியை தவறாக அர்த்தம் புரிந்துள்ளனர்.
கழு என்பது ஒரு வகை புல் ஆகும். முற்காலத்தில் தரையில் படுத்து தூங்க பாய் தைத்து நெய்வதற்கு அந்த புல்லை பயன்படுத்தினர். அந்த புல்லில் பாய் தைத்து நெய்ய சிறப்பு காரணம் உண்டு. அந்த புல் ஒரு வகை கற்பூர மனத்தை வெளிப்படுத்தும். அந்த மனம் பாம்பு, தேள் மற்றும் பல விஷப் பூச்சிகளை விரட்டக்கூடியது.
அதனால்தான் கூறினார்கள் கழு வில் தைத்ததில் தெரியும் கற்பூர வாசனை.
ஒரு துறையில் அனுபவம் கொண்டவர்க்கு அதின் வேலைகள் நன்றாக தெரியும் என்பதெ அதன் பொருள்.
2. தவறு: ஆயிரம் பேரைக் கொன்றால் தான் அரை வைத்தியன்.
சரியானது: ஆயிரம் வேரைக் கொண்டால் தான் அரை வைத்தியன்.
ஒரு வேலையில் சொதப்பும்போது ஒருவர் கூரும் சாக்குதான் இந்த பழமொழி. வைத்தியன் ஆவதற்கே ஆயிரம் பேரை கொள்ள வெண்டும் நான் ஒரு முறை தானே தவறு செய்தேன் என்று காரணம் சொல்வார். உண்மையில் அதன் சரியான மொழி
வேர்களை இடித்து கசக்கிப் பிழிந்தே மருந்துகளை தயாரித்தார்கள் நம் முன்னோர்கள். குறைந்தது ஆயிரம் வேர்களை வைத்திருந்தால் தான் அவன் அரை வைத்தியன் என்றே ஒத்துக்கொள்ளப் படுவான்.
3. தவறு: களவும் கற்று மற.
சரியானது: களவும் கத்தும் மற.
திருட்டு தொழிலையும் கூட ஒருமுறை செய்து பார்த்து விட்டு மறந்து விடு என்பதே எல்லோரும் அறிந்த விளக்கம். எல்லாவற்றையும் கற்று கொண்டு தீயதை மட்டும் விட்டு விடு என்பதே இதுவரை நமக்கு தெரிந்த அர்த்தம். ஆனால் சரியன உச்சரிப்பு
களவு என்றால் திருட்டு கத்து என்றால் சூது. திருட்டையும் சூதையும் நாடிச்செல்லாதே அதனை மறந்து விடு என்பதே சரியான விளக்கம்.
4. தவறு: அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை பிடிப்பான்.
சரியானது: அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
ஒன்றும் இல்லதவனுக்கு செல்வமும் வாழ்வும் கிடைத்து விட்டால் நடுராத்திரியில் வீட்டுக்குள் கொடை பிடிப்பான் என்பது தான் நாம் அறிந்த அர்த்தம். இதுவும் தவறாக புரிந்து கொண்ட ஒன்று.
ஒருவன் தான் செய்யும் தொழிலில் நேர்மை காத்து அதற்காகவே அர்பணித்து வாழ்ந்தால் செல்வம் பெருக்கும். அர்த்த ராத்திரியில் அவன் வீட்டுக் கதவை தட்டி தானம் கேட்டாலும் அல்லி தரும் கொடை வள்ளலாய் திகழ்வான்.
5. தவறு: ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
சரியானது: ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்.
ஆடி மாதம் அடிக்கும் காற்று அவ்வளவு வலுவாய் இருப்பதால் அம்மிக் கல்லும் பறந்து போகும். இதுவே எல்லோரும் அறிந்த விளக்கம். இதுவும் சொல் வழக்கில் வார்த்தைகள் மருவி விட்டன.
இதுதான் சரியான அர்த்தம். ஆடியில் காற்றடித்தால் அம்மை நோயும் பறந்து போகும் என்பதே பொருள். ஆடிக்கு முன் ஆவணி மாதத்தில் வெயிலின் சூட்டினால் அம்மை நோய் ஏற்ப்படும். ஆனால் ஆடி மாதத்தில் காற்று அடிப்பதால் சூடு தணியும். அம்மை நோய் போய் விடும். இதுவே விளக்கம்.
இது போல் இன்னும் பல பழமொழிகளை தவறாக உபயோகித்து வருகிறோம். இவை என் தமிழ் வாத்தியார் பள்ளியில் எனக்கு கூரியவை. உங்களுக்கு ஏதேனும் பழமொழி பற்றி தெரிந்து இருந்தால் அதை கமண்டில் கூறலாம். அல்லது என் விளக்கத்தில் சரி செய்தல் தேவைப் பட்டால் அதையும் கூறலாம்.
சில பிரபல தமிழ்ப் பழமொழிகள் பொருள் மாறிப் புரிந்து கொள்ளப்படுகின்றன. வேறு அர்த்தமும் சரியாகவே பொருந்துவதால் அதைச் சரிப்படுத்தும் சிரமத்தை அதிகம் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அந்தப் பழமொழிகளின் உண்மையான வடிவமும், பொருளும் அறிந்து கொள்வதே நல்லது அல்லவா? அப்படித் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சில தமிழ்ப் பழமொழிகளைப் பார்ப்போம்.
6. தவறு: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!
சரியானது: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!
மண் குதிர் என்பது மண் குவியல். ஆற்றின் நடுவில் தெரியும் மண் குதிர் நம்மை திடமாகத் தாங்கும் என்று எண்ணி அதை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது. அதில் கால் வைத்தால் அந்த மண் குதிர் சரிந்து நாம் விழ நேரிடும்.
7. தவறு: கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
சரியானது: கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு?
பூண் என்பது ஆபரணம். கையில் அணியும் பூண் அழகாக உள்ளதா என்று பார்க்கக் கண்ணாடி எதற்கு என்று கேட்பதாகவே பழமொழி பிறந்தது.
8. தவறு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
சரியானது: ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்.
ஆ நெய் என்பது பசுவின் நெய். பூ நெய் என்பது பூவின் தேன். அதாவது பசுவின் நெய் உண்ண ஒரு காலம் வந்தால், தேன் உண்ண ஒரு காலம் வரும். இளம் வயதில் பசுவின் நெய் அதிகம் உண்ணலாம். ஆனால் வயதான காலத்தில் தேன் உண்பதே சிறந்தது. நெய் உண்ணும் காலம் வந்தால், பின் தேன் உண்ணும் ஒரு காலமும் வரும் என்பதே இதன் பொருள்.
9. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.
இங்கு அடி என்பது இறைவனின் திருவடி என்பதையே குறிக்கும். இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொள். அவன் திருவடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உனக்கு உதவ மாட்டார்கள் என்பதே உட்கருத்து.
10. தவறு: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
சரியானது: கழு தைக்கத் தெரியும் கற்பூர வாசனை!
இங்கு கழு என்பது ஒருவகைக் கோரைப்புல். அந்த கழு கோரைப்புல்லில் பாய் நெய்யும் போது கற்பூர வாசனை இயல்பாக வரும். அதையே ஆரம்ப காலத்தில் பழமொழியாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
11. தவறு: கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!
சரியானது: கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்!
நாயகனான இறைவனின் சிலையைக் கல்லாகவே கண்டால் இறைவன் தெரிய மாட்டான். இறைவனாகவே கண்டால் கல் தெரியாது. இதில் நாயகன் என்பதே மருவி நாயாக மாறி விட்டது.