ஐந்நூறு மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனளர்களின் தொலைபேசி எண்கள், தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் வெளியாகின!

ஐந்நூறு மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனளர்களின் தொலைபேசி எண்கள், தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் வெளியாகின!


533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஆரம்ப கட்ட தகவல்களை வெளியிடும் அமைப்பொன்றினால் இணையத்தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளன. 


வெளிப்படுத்தப்பட்ட தரவுகளில் 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கும்.


இதில் அமெரிக்காவில் 32 மில்லியன் பயனர்கள், இங்கிலாந்தில் 11 மில்லியன் பயனர்கள் மற்றும் இந்தியாவில் 6 மில்லியன் பயனர்கள் ஆகியோரின் தரவுகளும் அடங்கும்.


தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் பயனாளர்கள் நேரடியாக பட்டியலிடப்படவில்லை. எனினும் ஏனைய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களின் மில்லியன் கணக்கானவர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


வெளிப்படுத்தப்பட்ட தரவு தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த திகதிகள், சுயவிவர வாழ்க்கை வரலாறுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அவர்களில் மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவையும் உள்ளன.


பேஸ்புக்கின் தகவல் தொடர்பு இயக்குனர் லிஸ் ஷெப்பர்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரவு திருடப்பட்டதாகக் கூறினார், மேலும் நிறுவனம் இந்த சிக்கலைக் கண்டுபிடித்து சரி செய்தது.


ஆனால் இன்று (04) வெளிப்படுத்தப்பட்ட தரவுகளை கண்டறிந்த சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனமான ஹட்சன் ராக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அலோன் கால், பிசினஸ் இன்சைடரிடம் தகவல் திருட்டு அல்லது ஃபிஷிங் மோசடிகளுக்கு இணையத்தள மோசடி செய்பவர்களால் பயன்படுத்தப்படலாம் என்று கூறினார்.


பேஸ்புக் மற்றும் அதன் சமூக ஊடக தளங்கள் மற்றும் பயன்பாடுகளின் மீதான பயனாளர்களின் நம்பிக்கை ஏற்கனவே குறைவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.