நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்!

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்!


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விவேக் (59), தனது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு நேற்று (16) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.00 மணியளவில் காலமானார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.