ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு ரிஷாட் உதவி?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு ரிஷாட் உதவி?


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு உதவினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து சிஐடியினரும் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே நாடாளுமன்ற உறுப்பினரையும் அவரது சகோதரரையும் கைது செய்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தற்கொலை குண்டுதாரிகளுடன் தொடர்புகளை பேணியமை குறித்தும் அவர்களிற்கு நிதி கிடைப்பதற்கு உதவியமை குறித்தும் ஆதாரங்கள் உள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


பொலிஸார் இது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் கிடைக்கும் போதெல்லாம் விசாரணைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.