
ரதல்ல சந்தி முதல் நானு ஓயா சந்தி வரையிலான சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இப்பாதை கடந்த 2 வருட காலமாக புனரமைக்கப்பட்டு நிறைவுறும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் நானு ஓயா ட்ரஸ்போட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வீதியிலே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு வழியாக மட்டுப்படுத்தபட்டுள்ளது.
உடனடியாக இப்பாதையை சீரமைக்கா விட்டால் பாரிய விபத்துகள் ஏற்படக்கூடும் என பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.