சிறையில் புத்தகம் ஒன்றை எழுதவுள்ள ரஞ்சன்!

சிறையில் புத்தகம் ஒன்றை எழுதவுள்ள ரஞ்சன்!

நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க புத்தகம் ஒன்றை எழுத தயாராகி வருகிறார்.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ராமநாயக்க தனது புத்தகத்திற்கு தேவையான தகவல்களை சிறிய காகித துண்டுகளில் குறித்து கொள்வதை அன்றாக நடவடிக்கையாக செய்து வருகிறார்.

இதனை தவிர அன்றாடம் நடப்பவை பற்றியும் காகித துண்டுகளில் குறித்து வருகிறார். தான் எழுதப் போகும் புத்தகத்திற்கான பெயரை ரஞ்சன் ராமநாயக்க இன்னும் வெளியிடவில்லை.

திரைப்பட நடிகர், பாடகர், அரசியல்வாதி முப்பரிமாணங்களை கொண்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க இந்த புத்தகத்தை வெளியிட்டால் நூல் ஆசிரியர் என்ற பெயரையும் பெறுவார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் இரத்தாகியுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, ஜனாதிபதியிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post