PHOTOS : தாய்வானில் தடம்புரண்ட ரயில் - ஏராளமானோர் பலி, பலர் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : தாய்வானில் தடம்புரண்ட ரயில் - ஏராளமானோர் பலி, பலர் படுகாயம்!

தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் இன்று (02) ரயிலொன்று தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 36 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஆரம்ப கட்ட தகவல்கள் நால்வர் உயிரிழந்தாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தாகவும் கூறியிருந்தன.

பல சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தைப்பேவிலிருந்து டைதுங் நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலொன்றே ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் சுமார் 350 பேர் ரயிலில் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில், வடகிழக்கு தாய்வானில் ஒரு ரயில் தடம் புரண்டதில் 18 பேர் இறந்தனர் மற்றும் 175 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.