பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்!

பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்!


பசறையில் இடம்பெற்ற பேருந்து விபத்தானது வீதியின் தன்மையினால் நிகழவில்லை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 20 ஆம் திகதி பசறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.


இந்த விபத்து இடம்பெற்ற மறுதினம் அது தொடர்பில் ஆராய்வதற்கு குறித்த மூவரடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்த மூவரடங்கிய விசாரணை குழுவினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விபத்து இடம்பெறுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, பாரவூர்தியின் சாரதி மற்றும் பேருந்தின் சாரதி ஆகியோரே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் எனவும் வீதி பாதுகாப்பு தொடர்பான பயற்சியாளரான டபிள்யூ. ஏ.வீரதுங்க தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post