அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்!

அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்!


கொரொனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், சுகாதார வழிகாட்டி ஆலோசனைக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தற்போதைய பொது வழிக்காட்டல்களை அரச நிறுவனங்களில் எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிடார்.

இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரொனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலையை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை பொதுவான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய விதம் குறித்து சுகாதார அமைச்சு நேற்று வழிக்காட்டல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது அலுவலங்களில் தேவையான குறைந்தளவான ஊழியர்களுடன் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முடிந்தளவு வீடுகளில் இருந்து பணிப்புரியவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post