தாய்க்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!

தாய்க்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!


தந்தையை அடித்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மகன் ஒருவர் பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு மகனும் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


திருநெல்வேலி பாரதிபுரத்தில் நேற்று (23) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் 05 பிள்ளைகளின் தந்தையான 52 வயதான என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர், தனது மனைவியுடன் முரண்பட்டு தகாத வார்த்தைகளால் தந்தை திட்டியதால் ஆத்திரமடைந்த மகன் ஒருவர், அவரைத் தாக்கியுள்ளார். அத்துடன், மைத்துனர் ஒருவரும் அவரைத் தாக்கியுள்ளார். இதனையடுத்து அவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.


யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் கோப்பாய் பகுதியில் பற்றைக் காணியில் மறைந்திருந்த தந்தையைக் கொலை செய்தார் எனக் கூறப்படும் மகனைக் கைது செய்தனர். இதன்போது மற்றொரு மகன், மைத்துனர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிவான், உடற்கூற்று பரிசோதனையின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post