எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்க தீர்மானம்!

எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்க தீர்மானம்!


கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும்  பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவி்த்துள்ளார்.

எனவே இந்த நிலைக்கு முகம் ​கொடுக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இதற்கு முன்னர் முன்னறிவித்தல்  வழங்கப்பட்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டதென்றும் ஆனால் தற்போதைய ​தொற்று அதிகரிப்பின் காரணமாக எவ்வித அறிவிப்பும் இன்றி முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டை முழுமையாக முடக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.