விசேட தேவையுடைய சகோதரியை அடித்துக்கொன்ற சகோதரன்! கற்பிட்டி பகுதியில் சோகம்!

விசேட தேவையுடைய சகோதரியை அடித்துக்கொன்ற சகோதரன்! கற்பிட்டி பகுதியில் சோகம்!


கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலங்குடா பீ முகாமில் சகோதரனின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இத்தாக்குதல் சம்பவம் நேற்று (18) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.


கற்பிட்டி ஆலங்குடா பீ முகாமைச் சேர்ந்த விசேட தேவையுடைய 43 வயது பெண்ணொருவரே தனது சகோதரரின் தாக்குதலில் மரணமாகியுள்ளார்.


சம்பவம் இடம்பெற்ற (18) இரவு ஒரே வீட்டில் வசித்து வந்த சகோதரன், தாய் மற்றும் சகோதரிகளுக்கிடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.


இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த சகோதரன் தனது 43 வயதுடைய சகோதரியை இரும்புக் கம்பியினால் கடுமையாக தாக்கியதுடன், 32 வயதான மற்றுமொரு சகோதரியையும், தாயையும் தாக்கியுள்ளார்.


இந்த தாக்குதலில் 43 வயதாக பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அவரின் மற்றொரு 32 வயதுடைய சகோதரியும் காயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


அத்துடன் சந்தேக நபரின் தாயும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பின்னர் இத்தாக்குதலை நடத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு புத்தளம் மாவட்ட நீதிவான் வருகை தந்து நீதிவான் விசாரனையை நடத்திய பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-முஹம்மட் ரிபாக்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.