நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை; இளையவர்களுக்கு அதிகளவில் தொற்று!
advertise here on top
advertise here on top

நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை; இளையவர்களுக்கு அதிகளவில் தொற்று!

நாட்டிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில், நோயாளர்கள் நிரம்பி வருகின்ற நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகள் முழுமை அடையும் அளவை அண்மித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையோருக்கு அதிகளவில் தொற்று ஏற்பட்டுள்ளமையே இந்த நிலைமைக்கு காரணம் என கொரொனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் தற்போது 700 கட்டில்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் புதிதாக 70 கட்டில்கள், தீவிர சிகிச்சை பிரிவிற்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை செயற்படாத தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு புதிதாக ஊழியர்களை இணைந்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் கடமையாற்றுவதற்கான பயிற்சிகளை பெற்று, வேறு விடுதிகளில் சேவை புரியும் ஊழியர்களை அத்தியாவசிய தேவை நிமிர்த்தம், தீவிர சிகிச்சை பிரிவுகளில் கடமைகளில் ஈடுபடுத்துமாறு, வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன், உரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருவதாகசுகாதார அமைச்சின் விநியோக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலைகளில் காணப்படும் ஒக்சிஜன் அளவை கணிப்பிட்டு, உடனடியாக அறிவிக்குமாறு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.