யார் இந்த கருணாரத்ன ஹேரத்? ஏன் முஸ்லிம்கள் இவரின் மறைவுக்கு இத்துணை கவலை வெளிப்படுத்துகிறார்கள்?

யார் இந்த கருணாரத்ன ஹேரத்? ஏன் முஸ்லிம்கள் இவரின் மறைவுக்கு இத்துணை கவலை வெளிப்படுத்துகிறார்கள்?

karunaratne herath

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் ஓர் முற்போக்கு தேசியவாதி, தனது நிபுணத்துவ ஆற்றலால் தேசிய ஒற்றுமைக்கு பங்களித்த சிரேஷ்டவர். சட்டத்துறையில் தனிப்பட்ட நோக்குகளுக்கு அப்பால் நின்று செயற்பட்டவர். துறை சார்ந்த வணிக இலாபங்களுக்கு அப்பால் செயற்பட்டசட்டவல்லுனர். சட்டம் சார்ந்த தெளிவுகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் முன் நின்றவர்.

குற்றவியல் நீதி, சிவில் சட்டம்,நிர்வாக சட்டம்,குடும்பவியல் சட்டம், தொழிற் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் சார்ந்து அநுராதாபுரம் மற்றும் பொலனறுவை மாவட்ட நீதிமன்றங்களில் தொழிற்துறை சார்ந்து செயற்ப்பட்டவர்.

இப்பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம் தமிழ் சமூகங்களுடன் மிக நெருக்கமான உறவுகளைக்  கொண்டிருந்தார்.

1980 ஆம் ஆண்டு சட்டத்தரணிகள் சங்கத்தின் நிரந்த உறுப்புரிமையைப் பெற்ற இவர், இலங்கையின் சட்ட அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவராவார்.

வனப் பாதுகாப்புச் சட்டம் (Environmental Conservation Law), வன ஜீவராசிகள் பாதுகப்புச் சட்டம், வன குற்றவியல் சட்டம் உள்ளிட்ட பல பாகங்களைக் கொண்ட நூல்களை இலங்கையின் சட்ட அபிவிருத்திக்கு வழங்கியுள்ளார்.

இவரின் சட்டத்துறைப் பங்களிப்பை ஓர் திருப்பு முனையாக சட்டவல்லுநர்கள் அடையாளப்படுத்தியுள்ளமையை இங்கு ஞாபகப்படுத்துகிறோம்.

குறிப்பாக இலங்கையில் வசிக்கும் இரண்டாம் சிறுபான்மை இனக் குழுவான முஸ்லிம்களின் மார்க்கத்துடன் தொடர்பான சட்டப் பரப்பை பிற இனத்தவராக ஆய்வு செய்து சமூகமயப்படுத்தியவர்.

இஸ்லாமிய சட்டம் தொடர்பாக வேறுபாடான என்னப்பாடுகளைக் கொண்டிருந்த இந் நாட்டு பொருன்பான்மை மக்களின் சந்தேகங்களை கற்கைத் துறையாக அனுகி இன்றும் உசாத்துனைகளாக பயன்படுத்துமளவு பல பங்களிப்புச் செய்தமையை இந் நாட்டு முஸ்லிம்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வர்.

தனிப்பட்ட அடைவுகளை எதிர்பார்ககாது மேற்கொண்ட இந்தப் பங்களிப்பு நிபுனத்துவ ஆற்றல் மிக்கவர்களுக்கு ஓர் முண்ணுதாரனமாகும்.

“முஸ்லிம் நீதிய” என்ற இவரின் நூலை தனி நபர்களின் பங்களிப்புடன் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் வெளியிட வாயப்புக் கிடைத்தமையை கௌரவமாக கருதுகிறது.

நாட்டில் தொழிற் துறைகளிலும், அரசியல்,சமூக மற்றும் மத ரீதியாக பிற்போக்கு பிரிவினைவாதங்கள்,அது சார்ந்த எண்ணப்பாடுகள் மீள வேறூன்றி, ஜனநாயக விழுமியங்கள் மதிப்பற்றுவரும் இக் காலப்பகுதியில் இவ்வாறான முற்போக்கு துறை சார் தேசியவாதிகளின் மறைவு நாட்டிற்கு பாரிய இழப்பாகும்.

-ஏ.ஜி.நளீர் அஹமட்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.