நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள், அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற எந்த நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வார்கள்! -ஓமல்பே சோபித தேரர்

நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள், அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற எந்த நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வார்கள்! -ஓமல்பே சோபித தேரர்


தற்கொலை தாக்குதல் நடத்த உறுதிமொழி எடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சமூகத்தில்  இருக்கலாம் என ஓமல்பே சோபித தேரர் கூறினார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு இன்று (21) கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே தேரர் இதனைத் தெரிவித்தார்.


அந்த தீவிரவாதிகளின் இலக்கை அடைந்துகொள்ள அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றிக்கொள்ள எந்த நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்வார்கள் என்ற அச்சம் எம்மிடம் உள்ளது.


விகாரைகளில், கோவில்களில், தேவாலயங்களில் அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்வார்களா என்ற சந்தேகம் எம்மிடம் உள்ளது. அந்த சந்தேகத்தை இல்லாமல் செய்ய வேண்டிய கடமை தற்போதய  அரசுக்கு உள்ளது.


தீவிரவாதம் பலவிதமான வடிவங்களில் வரலாம். அதன் ஒரு வடிவம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல். மக்களுக்கு விஷம் அடங்கிய உணவுகளை வழங்குவது தீவிரவாதத்தின் மற்றுமொறு வடிவம். மேலும் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழையும் இன்று நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post