கொரோனா தடுப்பூசி தீட்டம் இடை நிறுத்தப்பட்டது!

கொரோனா தடுப்பூசி தீட்டம் இடை நிறுத்தப்பட்டது!

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை புதன்கிழமை இரவு (31) முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

ஆக்ஸ்ஃபோர்ட் அஸ்றாஸெனிகா தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் இத்தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா சமீபத்தில் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியிருந்த போதிலும், இந்திய மருந்து நிறுவனத்திடம் இருந்து உத்தரவிடப்பட்ட தடுப்பூசிகளை சரியான நேரத்தில் இலங்கை பெறும் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை துறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கடந்த வாரம் உறுதியளித்திருந்தார்.

இருப்பினும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட தடுப்பூசி அளவுகளை வழங்குவதற்கான காலக்கெடுவை இன்னும் வழங்கவில்லை.

எனவே இதன் விளைவாக தடுப்பூசி திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

எதிர்பார்த்த அளவு தடுப்பூசி சரியான நேரத்தில் கிடைக்காமையால் புதிதாக தடுப்பூசி ஏற்றாமல் , இரண்டாவது முறை ஏற்ற வேண்டிய நபர்களுக்காக தடுப்பூசிகளின் இருப்பு வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஆனது 2021 ஏப்ரல் 19 முதல் சுகாதார அமைச்சகம் தொடங்கவிருந்தது.

2021 ஜனவரி 29 முதல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இலங்கை இதுவரை 900,000 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.