ஏப்ரல் 27: நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பான மிக முக்கிய 09 அறிக்கைகள்!

ஏப்ரல் 27: நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பான மிக முக்கிய 09 அறிக்கைகள்!

  • இலங்கையில் நாளொன்றுக்கு பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது. , 1,096 கொரோனா தொற்றாளர்கள் இன்று (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
  • 279 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சையின் பின் இன்று மருத்துவமனையில் வீடுகளுக்கு சென்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94,856 ஆக உயர்ந்துள்ளது.
  • தற்போதைய கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 30 ஆம் திகரி வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
  • ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா-ஜெனெகா கொரோனா தடுப்பூசியின் 2 வது டோஸ் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு நாளை முதல் வழங்கப்படவுள்ளன.
  • இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
  • மாத்தளை மாவட்டத்தில் இரு கிராம அலுவலக பிரிவுகள் இன்று தனிமைப்படுத்தப்பட்டன.
  • கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக பொதுச் சேவையை இயக்குவதற்காக வீட்டடிக் இருந்து பணி புரியும் திட்டம் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான சுற்றரிக்கையினை பொது நிர்வாக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு இதுவரை தடை விதிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • கடந்த சில வாரங்களில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 250 சிறைக் கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.
யாழ் நியூஸ் - எம் ஐ மொஹமட்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.