தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொற்கேணி பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது.
குறித்த தாய் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கச்செய்து விட்டு பின்னர் இரவு 12 மணியளவில் குழந்தையை பார்த்த போது குழந்தையின் வாய் மற்றும் மூக்கு பகுதியில் இருந்து நுரை வழிந்த நிலையில் கிடந்ததாகவும் இதனைத்தொடர்ந்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.